திண்டுக்கல்: நத்தம் அருகே பாப்பாப்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் கொட்டுவதற்காக நத்தம் பேரூராட்சி பகுதியிலிருந்து குப்பை, கோழி கழிவுகளுடன் டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது.
இந்தக் குப்பையை கொட்டும் போது அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழிவுடன் வந்த லாரியை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.