தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க கோரிக்கை ! - Dindugal news

திண்டுக்கல்: அரசு பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்துத் தர வேண்டுமென மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

gym
கொடைக்கானலில் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க கோரிக்கை

By

Published : Jan 4, 2020, 6:59 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் அமைத்துள்ளது. இந்த மைதானம் தற்போது கொடைக்கானல் நகராட்சி பொறுப்பில் உள்ளது. இங்கு கடந்த 2008ஆம் ஆண்டு சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பார்வையாளர் மாடமும், 2011ஆம் ஆண்டு உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.

ஆனால், இந்த உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பயன்படுத்தப்படாமல் காணப்படுகிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் முழுவதும் துருப்பிடித்து பழுதடைந்து காணப்படுகின்றன.

கொடைக்கானலில் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க கோரிக்கை

கடந்த ஒன்பது ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் காணப்படும் உடற்பயிற்சி கூடத்தால் மாணவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துவருகின்றனர். எனவே மைதானத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தை விரைந்து சீரமைத்துத் தர வேண்டுமென மாணவர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: செயற்கை மணலுக்காக விவசாய நிலத்தை அழிக்கும் மணல் மாஃபியாக்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details