திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று (பிப்.24) மதியம் வானத்தில் அதிக சத்தம் ஏற்படுவதை அடுத்து பொதுமக்கள் வானத்தை பார்த்தனர். அப்போது, பத்து விமானங்கள் ஒன்று சேர்ந்து வட்டமிட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், வானத்தில் பறந்தது போர் விமானமாக இருக்கக்கூடும் என எண்ணினர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் 10 போர் விமானங்கள் பறப்பது என்பது அரிதான ஒன்றாகும். இது குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இல்லாததால் பறந்தது போர்விமானங்களா அல்லது வேறு ஏதும் பயிற்சி விமானமா என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.