தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விலையும் குறைவு, விளைச்சலும் குறைவு... பேரிக்காயால் விவசாயிகள் தொய்வு - Pear cultivation

பேரிக்காய் விலை குறைவால் கொடைக்கானல் விவ‌சாயிக‌ள் கவலையடைந்துள்ளனர்.

KODAIKANAL BERIKKAI CULTIVATION
KODAIKANAL BERIKKAI CULTIVATION

By

Published : Jul 9, 2021, 9:25 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் ப்ளம்ஸ், அவக்கோடா, பிச்சிஸ் உள்ளிட்ட பழ வகைகள் பல ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, ப‌ள்ள‌ங்கி, வில்ப‌ட்டி, செண்ப‌க‌னூர் , பாம்பார்புர‌ம் உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளில் பெரும்பாலும் பேரிக்காய் விளைவிக்கப்படுகிறது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு விளைவிக்கப்படும் பழ வகைகளை விரும்பி வாங்கிச் செல்வ‌ர். கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்து போன‌தால் ஜூன், ஜூலை மாதங்களில் விளையும் பேரிக்காய் விளைச்சல் த‌ற்போது குறைந்துள்ள‌து.

இங்கு விளையும் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ பேரிக்காய் 30 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விளைச்சலும் குறைவு, விலையும் குறைவு என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details