தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தில் சுபாஷ் பண்ணையார் ஆஜர்!

திண்டுக்கல்: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட 12 பேர் ஆஜர் ஆகியுள்ளனர்.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 12 பேர் ஆஜர்

By

Published : Nov 19, 2019, 3:31 PM IST

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 2012ஆம் ஆண்டு நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இருக்கலாம் என 18 பேர் கருதப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றவாளியாகக் கருதப்பட்ட 18 பேரில் தற்போது நான்கு நபர் உயிருடன் இல்லை. இந்நிலையில், வழக்கின் முக்கியக் குற்றவாளி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 12 பேர் இன்று திண்டுக்கல் சிறப்பு எஸ்சி / எஸ்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 12 பேர் ஆஜர்

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், வரும் டிசம்பர் 3ஆம் தேதியன்று மீண்டும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். சுபாஷ் பண்ணையார் வருகையையொட்டி நீதிமன்றத்திற்கு வரும் மக்கள், பலத்த சோதனைக்குப் பிறகு தான் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தையில் உடன்பாடு - ஐஐடி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details