தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன். கடந்த 2012ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் 18 குற்றவாளிகளில் நான்கு பேர் தற்போது உயிரோடு இல்லை.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 14 பேர் சிறப்பு எஸ்.சி/எஸ்.டி. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன் வரும் 19-ஆம் தேதியன்று மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.