தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் பேஷன் பழங்களின் அறுவடை தொடக்கம் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பேஷன் பழங்களின் அறுவடை தொடங்கியுள்ளது.

பேசன் ஃப்ரூட் அறுவடை தொடக்கம்
பேசன் ஃப்ரூட் அறுவடை தொடக்கம்

By

Published : Oct 4, 2021, 5:31 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் மருத்துவக் குணம் வாய்ந்த பேஷன் பழங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதயப் பிரச்னை உள்ளிட்ட நோய்களுக்குப் பேஷன் பழங்கள் சிறந்த மருந்தாகும்.

பேசன் ஃப்ரூட் அறுவடை தொடக்கம்

பேஷன் ஃபுருட் அறுவடை தொடக்கம்

இந்த பழங்களின் நாற்றுக்களை தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை மூலமாக மானிய விலையில் வாங்கி நட்டு, விவசாயம் செய்த நிலையில், அது நன்கு வளர்ந்துள்ளதால் அதனை அறுவடை செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

கிலோ ரூ.40 வரை விற்பனை

கரோனா காலகட்டத்தில் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் கீழே பேஷன் பழங்கள் விற்பனையாகின. தற்போது கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

இதையும் படிங்க:Operation Tiger T23 - 10ஆவது நாளாக ஆட்கொல்லி புலியைத் தேடும் பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details