தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களை ஆபாசமாக மிரட்டிய ஆசிரியை - பள்ளியை பூட்டி பெற்றோர் போராட்டம்

திண்டுக்கல் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை ஆபாசமாகப் பேசி தாக்கியதாக, ஆசிரியை ஒருவரை பணி நீக்கம் செய்யக்கோரி, பள்ளியை பூட்டி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

dindigul  parents locked the school  parents locked the school and protest  parents protest in school  protest  parents protest  மாணவர்களை ஆபாசமாக மிரட்டிய ஆசிரியை  பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்  போராட்டம்  திண்டுக்கல்  ஆசிரியை பணி நீக்கம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி  ஆபாச வார்த்தைகள்
பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்

By

Published : Dec 8, 2022, 9:39 PM IST

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே அழகாபுரியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 155 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றன. இங்கு தலைமை ஆசிரியர் உள்பட எட்டு ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பாடம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியை ஜெயந்தி என்பவர் மாணவ - மாணவிகளை ஆபாச வார்த்தைகள் பேசி கடுமையாக தாக்கியதாக, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வட்டாரத் தொடக்கப்பள்ளி அலுவலர்களுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதனைக்கண்டித்து, ஆசிரியை ஜெயந்தியை பணி நீக்கம் செய்யக்கோரி, பள்ளியை பூட்டிவிட்டு, மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்

சம்பந்தப்பட்ட ஆசிரியை உடல் நிலை சரியில்லாத காரணத்தினார் இன்று பள்ளிக்கு வராததால், தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'கடந்த ஆட்சியாளர்களுக்கு தமிழ் மொழி என்றால் என்னவென்றே தெரியாது' - எழுத்தாளர் இமையம்

ABOUT THE AUTHOR

...view details