திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 9ஆவது நாளான இன்று(மார்ச் 21) சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பழனி தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தனர்.