திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் கிராம பகுதிகளில் உள்ள பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுதிறனாளிகள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க செயல் அலுவலர் தங்கபாண்டி கலந்துகொண்டு இந்தத் திட்டம் குறித்து விளக்கமளித்தார். அப்போது, கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி அதற்காக வங்கிகளில் கடன் பெற்று தந்து வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.