திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி இந்திரா, தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலையால் உயிரிழந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திரா, சத்திரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே, இவர் குடும்பத்தை கவனிக்க சென்னமநாயக்கன்பட்டிக்கும், ஊராட்சி நிர்வாகத்தைக் கவனிக்க சத்திரப்பட்டிக்கும் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
ஒரு கட்டத்தில் மன உளைச்சல் காரணமாக, இந்திரா தான் குடியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலையால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த தாடிக்கொம்பு காவல் துறையினர் இந்திராவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.