தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் அள்ளுவதைத் தடுக்க ஊராட்சி தலைவர்கள் வட்டாட்சியரிடம் மனு!

திண்டுக்கல்: வேடசந்தூர், வடமதுரை ஒன்றியத்தில் மனல் மற்றும் கிராவல் மண் அள்ளுவதை தடுக்க வேண்டுமென 15க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

stop sand mining
dindigul Panchayat leaders

By

Published : Jul 12, 2020, 4:39 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தெண்ணம்பட்டி, மோர்பட்டி, பிளாத்து, காணப்பாடி, உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த சில வருடங்களாக சட்டவிரோதமாக சிலர் மணல் மற்றும் கிராவல் மண்களை கனரக வாகனங்கள் மூலம் அள்ளி விற்பனை செய்துவந்துள்ளனர்.

இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிப்படைந்து மிகவும் வறட்சியான பகுதியாக மாறியதால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்து விட்டது.

இதனையடுத்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் கிராமசபை கூட்டங்களில் பேசி பொதுமக்களின் துனையுடன் 15க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றினைந்து நேற்று (ஜூலை 11) வட்டாட்சியர், துணை கண்காணிப்பளர் ஆகியோருக்கு மனு அளித்தனர்.

ஊராட்சி தலைவர்கள் வட்டாட்சியரிடம் மனு

அந்த மனுவில், “கிராமப் பகுதிகளில் உள்ள மணல் மற்றும் கிராவல் மண் அல்ல வழங்கும் ஒப்புகை சீட்டின் உரிமத்தை மாவட்ட நிர்வாகம், ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கிய பின் அரசு அதற்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆம்புலன்ஸ் வசதியில்லாததால் 23 கி.மீ., மருத்துவமனைக்கு நடந்து சென்ற கர்ப்பிணிப் பெண்!

ABOUT THE AUTHOR

...view details