தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூலத்தூர் ஊராட்சி அலுவலர் இறப்பு: ஊராட்சி மன்றத் தலைவர் கைது - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: பூலத்தூர் ஊராட்சி அலுவலர் இறப்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஊராட்சி மன்றத் தலைவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர் கைது
ஊராட்சி மன்ற தலைவர் கைது

By

Published : Apr 29, 2021, 5:57 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூலத்தூர் ஊராட்சியில் அலுவலராக குமரேசன் (58) என்பவர் பணியாற்றிவந்தார்.

இவருக்கு மனைவி இல்லை. இவருடைய மகன்கள் வெளியூரில் வேலை செய்துவருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு குமரேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இவரின் இறப்பில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சந்தேகத்தின் அடிப்படையில் பூலத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தனை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கைதி கொலை: தொடங்கியது சிபிசிஐடி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details