திண்டுக்கல்:பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணை என்பது திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அணையாக விளங்குகிறது. இந்த அணை 65அடி கொள்ளளவு கொண்டதாகும். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
இதன் காரணமாக விவசாய தேவைக்கு அணையில் தண்ணீரை திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பாலாறு பொருந்தலாறு அணையின் இடதுபுற பிரதான கால்வாயில் இருந்து தினமும் விநாடிக்கு 70 கனஅடி நீர் வீதம் 110 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.