தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து - திண்டுக்கல் மாவட்ட விபத்துச் செய்திகள்

பழனி அருகே மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில், சிறு காயங்களுடன்‌ பயணம் செய்த அனைவரும் உயிர்தப்பினர்.

பழனி அருகே வேன் கவிழ்ந்து விபத்து
பழனி அருகே வேன் கவிழ்ந்து விபத்து

By

Published : Aug 3, 2021, 6:34 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானலில் இருந்து பழனிக்குச்சென்ற சுற்றுலா வேன் ஒன்று, பழனி அருகே உள்ள வட்டமலை நான்காவது கொண்டை ஊசிவளைவில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து பின்னால்வந்த வாகனங்களில் வந்தவர்கள், வேனில் பயணம்செய்த பதினைந்துக்கும் மேற்பட்டோரை மீட்டனர். அவர்கள் அனைவரையும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகக்காக அனுமதித்தனர்.

பழனி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து

இதுகுறித்து காவலர்கள் விசாரித்ததில் விழுப்புரத்திலிருந்து கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டு, பழனி வழியாக ஊர் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இவ்விபத்தில் சிறு காயங்களுடன் அனைவரும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இதையும் படிங்க: 'போலீஸ் விசாரணையால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை'

ABOUT THE AUTHOR

...view details