திண்டுக்கல்:முருகனின்அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இன்று (ஜூன் 06) வைகாசி விசாகத்திருவிழா தொடங்கியது. பழனி கோயிலின் உபகோயிலான பெரியநாயகிஅம்மன் கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் ஆறாம்நாள் திருவிழாவான வருகிற 11ஆம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவிலும் நடைபெறவுள்ளது.