தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனியில் 2ஆவது நாளாக தொடரும் ஊழியர்களின் போராட்டம் - நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்? - workers against temple management at Palani

Palani temple workers protest: பழனி கோயிலில் முடி எடுக்கும் ஊழியர்களை உதவி ஆணையர் லட்சுமி அவமரியாதையாக பேசியதாக கூறி, அவரை கண்டிக்கும் விதமாக 2ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Palani temple workers protest
பழனி கோயிலில் 2வது நாளாக தொடரும் முடி எடுக்கும் ஊழியர்களின் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 2:57 PM IST

பழனி கோயிலில் 2வது நாளாக தொடரும் ஊழியர்களின் போராட்டம்

திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு என அழைக்கப்படும் பழனி தண்டாயுதபாணி கோயில் புகழ்பெற்றது ஆகும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்களது முடி காணிக்கையை செலுத்துவது வழக்கம். இதற்கென கோயில் நிர்வாகம் சார்பில் சரவணப் பொய்கை, சண்முக நதி, ஒருங்கிணைந்த முடிமண்டபம், மின் இழுவை ரயில் முடிமண்டபம், தண்டபாணி நிலையம் ஆகிய இடங்களில் முடி காணிக்கை செலுத்தலாம்.

அதற்காக இங்கு சுமார் 330 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது இவர்கள் உரிமம் அடிப்படையில் வேலை செய்து வருவதால், நிரந்தரமான மாத ஊதியம் என்பது கிடையாது. ஆகையால் இந்த பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு பணியாளருக்கு மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் காணிக்கை செலுத்தும் இலவச டிக்கெட்டுகளில் 30 ரூபாய் பங்கு வீதம் மாதம் தோறும் சீட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து இவர்களுக்கு பங்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்களிடம் முடி காணிக்கை செலுத்துவதற்கு பணம் பெறக்கூடாது எனவும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் உதவியாளர் லட்சுமி 2 நபரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 15 நாட்கள் பின்பு 2 தொழிலாளர்களும் உதவி ஆணையர் லட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு பணியில் சேர்வதற்கு கோரியுள்ளனர். ஆனால் தங்களது மனைவிகளை அழைத்து வந்தால் மட்டுமே பணி தருவேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, கோயில் பணியாளர் தமிழ்செல்வன் மற்றும் குமரேசன் உதவி ஆணையரை சந்திக்க அவருடைய மனைவி அழைத்துச் சென்ற போது, "தங்களுடைய கணவர்களை தினமும் திருடுவதற்கு அனுப்பி விட்டீர்களா, மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள், இந்த காசை வைத்து எப்படி பிழைக்கறீர்கள், நல்லா இருக்க மாட்டீர்கள்" என்று அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஊழியர்களும், அவர்களது மனைவிகளும் கண்ணீருடன் வெளியே வந்துள்ளதாக கூறுகின்றனர். இதனை அடுத்து முடி காணிக்கை செலுத்தும் தொழிலாளர்கள் நேற்று (செப்.20) உதவி ஆணையர் லட்சுமியை கண்டிக்கும் விதமாக கண்டன பேட்ச் அணிந்து, நூதன முறையில் பணி செய்து கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நேற்று போராட்டத்தின் போது, இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வராததால், இன்றும் உதவி ஆணையர் லட்சுமியை கண்டித்து கண்டன பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது. மேலும் இதற்கு நியாயம் கிடைக்க வில்லை என்றால், நாளை பணி புறகணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாளை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் பக்தர்கள் மொட்டை அடிக்க முடியாமல் அவதிக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. இதனைடையே உதவியாளர் லட்சுமி கடந்த சில நாள்கள் முன்பு கோழி, சேவல் விடுதல் சர்ச்சையிலும், அதே போல சாலையோர வியாபாரி பெண்ணை தாலிச் சங்கிலி பிடித்து இழுத்தது போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் மீண்டும் கோயில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் மனைவியை தரக்குறைவாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் விஜர்சனம்.. காவேரியில் திரண்ட மக்கள் வெள்ளம்!

ABOUT THE AUTHOR

...view details