தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி கோயிலில் 72 நாட்களுக்குப் பிறகு ரோப் கார் இயக்கம்! - 72 நாட்கள் பராமரிப்பு பணி,

திண்டுக்கல்: பழனி கோயிலில் வருடாந்திர பராமரிப்புப் பணி முடிந்து 72 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் பயன்பாட்டுக்கு ரோப் கார் இயக்கப்பட்டது.

palani rope car

By

Published : Oct 8, 2019, 11:54 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு பக்தர்கள் மலைக்குச் சென்றுவர படிப்பாதை, மின்இழுவை ரயில், ரோப்கார் இயக்கப்பட்டுவருகிறது. இரண்டு நிமிட கால அவகாசத்தில் அடிவாரத்திலிருந்து மலைக்கோயில் செல்லும் ரோப்கார் சேவை பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரோப்கார் சேவை பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதத்திற்கு ஒரு நாளும் ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பழனியில் இயக்கப்பட்ட ரோப் கார்

இதன் அடிப்படையில் ஜூலை 29ஆம் தேதி வருடாந்திர பராமரிப்புக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரோப்கார் மேல்தளம், கீழ் தளத்தில் உள்ள மோட்டார் பற்சக்கரங்கள் கழற்றப்பட்டு புதிய பேரிங்குகள், சாஃப்டுகள், புஷ்கள் மாற்றப்பட்டன. இதில், கேபின்கள், இருக்கைகள், கதவுகள் ஆகியன மாற்றப்பட்டு புதிய பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டது.

ரோப் கார் மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்து 120 கிலோ எடைக்கற்கள் வைத்து, சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு ரோப் கார் இயக்கப்பட்டது.

வருடாந்திர பராமரிப்புப் பணி முடிந்து எழுபது நாட்களுக்கு பின்னர் பழனி மலையில் ரோப் கார் இயக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details