தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி மலைக்கோயிலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மருந்து சாத்தும் நிகழ்ச்சி - Dindigul Palani Temple Festival

திண்டுக்கல்: பழனி மலைக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, 13 ஆண்டுகளுக்கு பிறகு மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி மலைக்கோயில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் திண்டுக்கல் பழனி முருகன் கோயில் மருந்து சாத்தும் நிகழச்சி Palani Temple Festival Preparation Palani Murugan Temple Festival Dindigul Palani Temple Festival பழனி முருகன் கோயில்
Palani Temple Festival Preparation

By

Published : Jan 20, 2020, 5:14 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு திருப்பணியின் முக்கிய நிகழ்வாக பால தண்டாயுதபாணி சிலை அமைந்ததிருக்கும் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5:30 மணிக்கு மலைக்கோயில் சன்னதி திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், 5:40 மணிக்கு பூஜையும், 6:10 மணிக்கு சிறு காலசாந்தி பூஜையும், 6:20 மணிக்கு காலசாந்தி பூஜையும் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து, அஷ்டபந்தன மருந்து சாத்துவதற்காக காலை 6:30 மணி முதல் கோயிலில் உள்ள சண்முகர் சன்னதியில் சிறப்பு பூஜைகளும், யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, காலை 9:45 மணிமுதல் 10:30 மணிவரை மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெற்றன.

மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் காலை 6:30 மணிமுதல் காலை 10:30 மணிவரை நான்கு மணிநேரம் பக்தர்கள் சாமி தரிசனம்செய்வது நிறுத்திவைக்கப்பட்டது.

பின்னர் காலை 10:30 மணிக்கு மேல் வழக்கம்போல், பக்தர்கள் சாமி தரிசனம்செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணைஆணையர், ஊழியர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.5.71 கோடி!

ABOUT THE AUTHOR

...view details