தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்குலேட்டரை மிஞ்சும் சிறுவன் - மனித கம்ப்யூட்டர் பட்டம் வழங்கி கௌரவம் - Abhinav is an eight year old boy

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிறுவன் கால்குட்டரையே மிஞ்சும் அளவிற்கு கணிதத்தில் சாதனை படைத்துள்ளான். சிறுவன் மனித கணினி என இந்தியாஸ் வெர்ல்ட் ரெக்கார்ட் சான்று அளித்துள்ளது.

Etv Bharatகால்குலேட்டரை மிஞ்சும்  சிறுவன் - மனித கம்ப்யூட்டர் பட்டம் அளித்த இந்தியா வெர்ல்ட் ரெக்கார்ட்
Etv Bharatகால்குலேட்டரை மிஞ்சும் சிறுவன் - மனித கம்ப்யூட்டர் பட்டம் அளித்த இந்தியா வெர்ல்ட் ரெக்கார்ட்

By

Published : Nov 26, 2022, 2:35 PM IST

திண்டுக்கல்:பழனி அக்ஷயா அகாடமி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் எட்டு வயது சிறுவன் அபினவ். கால்குலேட்டரையே மிஞ்சும் அளவுக்கு கணிதத்தில் சாதனை படைத்து வருகிறான்.

ஓரிலக்க, ஈரிலக்க எண்களின் தொடர்ச்சியாக பெருக்குதல், கூட்டுதல், மடங்குகள், வர்க்கம், கண எண்கள், பிதாகரஸ் எண்கள் தொடர்பை காணுதல் என கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் சிறுவன் கணித வினாக்களுக்கான விடைகளை கூறி அசத்துகிறார்.

மேலும் ஒருவரின் வயதை கூறினால் அதை நொடிகளாக கணக்கிட்டு கூறக்கூடிய அளவுக்கு அபார திறமை பெற்றுள்ளார். சிறுவன் அபினவின் திறமையை இந்தியாஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆய்வு செய்து எங்கஸ்ட் ஹுமன் கால்குலேட்டர் (Youngest Human Calculater)என சான்று வழங்கியுள்ளது.

கால்குலேட்டரை மிஞ்சும் சிறுவன் - மனித கம்ப்யூட்டர் பட்டம் அளித்த இந்தியா வெர்ல்ட் ரெக்கார்ட்

சிறுவயதில் கணிதத்தில் அபார திறமை பெற்றுள்ள சிறுவனை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நண்பர்கள் பாராட்டினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது கணித திறமையை வெளிப்படுத்தி அவரிடம் பாராட்டு பெற வேண்டும் என்பது தனது ஆசை என சிறுவன் அபிநவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கொடைக்கானல் குறிஞ்சி மலர்கள் ஆய்வில் கல்லூரி மாணவிகள்!

ABOUT THE AUTHOR

...view details