தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?

பழனி மலைக்கோயில் முருகன் கோயிலின் உண்டியலில் ரூ.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 23, 2023, 1:31 PM IST

ரூ.7 கோடி வருவாய் பழனி மலைக்கோயில் முருகன் கோயிலின் உண்டியலில் கிடைத்துள்ளது

திண்டுக்கல்:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்யத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்யும்போது, காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோயில் முதல் மலைக்கோயில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளால் உண்டியல்கள் நிறைந்த பின்னர் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத்திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி இன்று (பிப்.23) நடைபெற்றது. மூன்று நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கமாக 7 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 126 ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது.

மேலும் 1 கிலோ 248 கிராம் தங்கமும், 48 கிலோ ஆயிரத்து 277 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சி 2529 நோட்டுகளும் வருவாயாகக் கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றதாகத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

காணிக்கையாக வந்த தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள்

பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இந்த உண்டியல் பணத்தை எண்ணும் பணிக்காக சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.

இதையும் படிங்க: Nellai Book Fair: இருவாச்சி பறவையை லோகோவாக மாவட்டம் நிர்வாகம் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details