தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி முருகன் கோயிலில் 3 கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் வசூல்!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் உண்டியல் வருவாய் மூன்று கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்து 310 ரூபாய் கிடைத்துள்ளது.

பழனி முருகன்
பழனி முருகன்

By

Published : Sep 16, 2020, 10:34 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்து, கோயிலில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது.

இதனையடுத்து 14 தினங்களாக பக்தர்கள் பழனி மலையில் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். இந்த நிலையில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மலை மீதுள்ள கார்த்திகை மண்டபத்தில் வைத்து தரம் பிரித்து எண்ணப்பட்டது.

மூன்று நாள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக மூன்று கோடியே 20 லட்சத்து 44 ஆயிரத்து 310 ரூபாய். தங்கம் 1, 039 கிராம், வெள்ளி 13 ஆயிரத்து 923 கிராம், ஆயிரத்து 236 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details