திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் கடந்த 25 நாட்களாக பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
இதில் ரொக்கமாக இரண்டு கோடியே 57 லட்சத்து 41 ஆயிரத்து 520 ரூபாயும், தங்கமாக 670 கிராமும், 12,300 கிராம் வெள்ளியும், 545 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளது
இரண்டாம் நாளாக எண்ணப்பட்ட உண்டியலில் கூடுதலாக மூன்று கோடியே 16 லட்சத்து 370 ரூபாயும், 220 கிராம் தங்கமும், 3260 கிராம் வெள்ளியும் வெள்ளி 3260 கிடைத்தது.
ஆக, பழனி முருகன் கோயிலுக்கு கடந்த 25 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக ஐந்து கோடியே 73 லட்சத்து 41 ஆயிரத்து 890 ரூபாய் ரொக்கமாக வழங்கியுள்ளனர்.
இதுமட்டுமின்றி தங்கம் 890 கிராமாகவும், வெள்ளி 15560 கிராமும் கிடைத்துள்ளது. பழனி முருகன் கோயிலில் ஐந்து கோடிக்கும் மேல் உண்டியல் காணிக்கை கிடைக்கபெற்றது இதுவே முதல் முறை.
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் பழனி கோயில் இணைஆணையர் ஜெயசந்திரபானுரெட்டி, துணைஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது.
கோயில் உண்டியல் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மட்டுமின்றி வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
கார்த்திகை மாதம் பழனி முருகன் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் கூடுதல் உண்டியல் வருவாய் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: 'அசல் மரகத லிங்கத்தை கண்டுபிடிக்க வேண்டும்' - திருத்தொண்டர் படைத் தலைவர் கோரிக்கை