தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனியில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் செயல்படும் கல்லுாரிகளில் ஆய்வு! - பழனி தண்டாயுதபாணி கோயில்

திண்டுக்கல்: பழனியில் இந்துசமய அறநிலையத் துறையின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுசெய்யப்பட்டது.

பழனி
பழனி

By

Published : Apr 20, 2021, 10:07 AM IST

Updated : Apr 20, 2021, 10:15 AM IST

பழனியில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், தேவஸ்தான நிர்வாகத்தால் ஆண்கள், பெண்கள் பயிலும் கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

பழனியில் இந்து சமய அறிநலையத் துறையின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஆய்வு

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவது, கல்லூரியை நவீனப்படுத்துவது குறித்து மாணவ, மாணவியருக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

இந்த ஆய்வில் பழனி கோயில் அறங்காவர் குழு தலைவர் அப்புகுட்டி, உறுப்பினர்கள், கோயில் செயலாளர், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Last Updated : Apr 20, 2021, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details