திண்டுக்கல்: பழனி ஆயக்குடி கொய்யா சந்தையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பழங்களை சாக்கடையில் கொட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொய்யாக்களை சாக்கடையில் கொட்டிச் சென்ற விவசாயிகள் - அரசு நடவடிக்கை எடுக்குமா? - பழனி ஆயக்குடி கொய்யா சந்தை
திமுக எம்எல்ஏ ஐ.பி செந்தில் குமார் 2016 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் இந்த பகுதிக்கு கொய்யா பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கபடும் என தெரிவித்தே இந்த விவசாயிகளின் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இதுவரை இந்த பகுதிக்கு கொய்யா பழச்சாறு தொழிற்சாலை அமைக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது பழைய ஆயக்குடி, இந்தப் பகுதியில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொய்யாவை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கும் கொய்யா பழங்கள் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்திற்கும் அனுப்பப்படுகிறது.
20 கிலோ பெட்டி கொய்யா சுமார் 500 ருபாய் முதல் ஆயிரம் ருபாய் வரை விற்பனை செய்யபட்டு வந்தது. ஊரடங்கு காலத்தில் வெளியூர்களில் வியாபாரம் செய்ய முடியாததால் நஷ்டத்தில் இருந்த விவசாயிகள், ஊரடங்கு தளர்வுக்கு பின் ஆயக்குடி கொய்யா சந்தையில் கொய்யாக்களை விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இன்று 20 கிலோ பெட்டி கொய்யா 100 ருபாய் முதல் 150 ருபாய் வரை மட்டுமே கேட்கப்படுகிறது. கொய்யாக்களை பறிக்கும் கூலிக்கு கூட விலை கட்டுபடி ஆகவில்லை என டன் கணக்கில் சாக்கடையில் கொட்டிச் செல்லும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்எல்ஏ ஐ.பி செந்தில் குமார் 2016 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் இந்த பகுதிக்கு கொய்யா பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கபடும் என தெரிவித்தே இந்த விவசாயிகளின் வாக்குகளை மட்டும் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இதுவரை இந்த பகுதிக்கு கொய்யா பழச்சாறு தொழிற்சாலை அமைக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TAGGED:
பழனி ஆயக்குடி கொய்யா சந்தை