மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கு பிப்ரவரி 7ஆம் தேதி முருகன் கோயில் யானை (கஸ்துாரி) சென்றது. அங்குச் சென்றபோது கஸ்தூரியின் எடை நான்காயிரத்து 500 கிலோவாக இருந்தது. தற்போது 110 கிலோ எடை குறைந்து நான்காயிரத்து 390 கிலோவாக உள்ளது.
யானையின் உடல் எடை குறைந்துள்ளதால் கோயில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழனி வந்த கஸ்தூரிக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.