திண்டுக்கல்:பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சி ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கீரனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்செய்திருந்தனர்.
இதில் குறிப்பாக 15ஆவது வார்டு பகுதியில் அருந்ததி இனமக்கள் அதிகளவில் இருப்பதால் திமுக, அதிமுக சார்பில் அருந்ததி இனத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு திமுக சார்பில் அருக்காணியும், அதிமுக சார்பில் லட்சுமி என்பவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல்செய்தனர்.
இந்நிலையில் இன்று கீரனூர் பேரூராட்சியில் 15ஆவது வார்டில் போட்டியிடும் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல்செய்திருந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்செய்திருந்த அமராவதி என்பவர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து 15ஆவது வார்டில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளைத் திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி கிராம நிர்வாக அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், “கீரனூர் பேரூராட்சிக்குள்பட்ட 15ஆவது வார்டில் அருந்ததியினர் அதிகளவில் வசித்துவருகின்றனர். அதனாலேயே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பில் போட்டியிட அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.