தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனோடு, கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழனி திமுக எம்எல்ஏ.,வுக்கு கரோனா! - திமுக எம்எல்ஏவுக்கு கரோனா
திண்டுக்கல்: பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
dmk mla
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுது செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தஞ்சாவூர் திமுக எம்எல்ஏ., நீலமேகமும் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்: 'அமைச்சர் விளக்கமளிப்பாரா?' - ஸ்டாலின் கேள்வி