திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், கடந்த தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டதால், 26 நாட்களில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - ரூ. 4.59 கோடி வரவு - பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், நான்கு கோடியே 59 லட்சத்து 48 ஆயிரத்து 430 ரூபாய் ரொக்கம் வரவு வந்துள்ளது.
பழனி முருகன் கோயில்
திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், நான்கு கோடியே 59 லட்சத்து 48 ஆயிரத்து 430 ரூபாய் ரொக்கம், ஆயிரத்து 267 கிராம் தங்கம், 18 ஆயிரத்து 575 கிராம் வெள்ளி, 244 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: என்ன நடந்தது?