திண்டுக்கல் மாவட்டம், வண்ணாம்பாறை பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 8 மாதங்களாக குடிநீர் குழாயிலிருந்து, வாரத்திற்கு நான்கு குடம் தண்ணீர் மட்டுமே வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சம்பந்தபட்ட அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் அப்பகுதிச் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர், தண்ணீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் இதுகுறித்து பேசிய மாரியம்மாள் என்பவர், "நாங்கள் தினந்தோறும் குடிநீருக்காக குடம் 7ரூபாய்க்கு வீதம் பத்து குடம் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுமட்டுமின்றி அன்றாட செலவிற்காக தண்ணீர் ஒரு டேங்க் தண்ணீர் வாங்க 400 ரூபாய் செலவிட நேர்கிறது. ஒரு மாதத்திற்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தண்ணீருக்கு மட்டுமே செலவாகிறது. தண்ணீர் எவ்வளவு நாட்களுக்கு விலைக்கு வாங்கி வருவது. இதுப்பற்றி எத்தனை முறை புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எங்களுக்கு முறையாக தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனறார்.
இதையும் படிங்க:குடிநீர் பஞ்சத்தை போக்க களத்தில் இறங்கிய இளைஞர்கள்!