திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தேனீர் கடைகள் உள்ளன. இங்கு தேங்கும் குப்பைகளை நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் சேமிப்பது வழக்கம்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமாக குப்பை கொட்டுவதற்கென இடம் இல்லாததால் குப்பை அள்ளப்படாமல் வழி நெடுகிழும் குப்பைத் தொட்டிகளில் குப்பை மலை போல் தேங்கி உள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் குப்பை அதிகரித்து திடீரென அதிகாலையிலேயே தீ பற்றி கொண்டதால் பேருந்து நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.