தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புனே டூ மதுரை' 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி! - lorry accident at dindugal

திண்டுக்கல்: புனேயிலிருந்து மதுரைக்கு வெங்காயம் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குளானது.

ds
sd

By

Published : Apr 8, 2020, 11:37 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெட்டூர் பாலத்திலிருந்து 60 அடி பள்ளத்தில் வெங்காய லாரி கவிழ்த்து விபத்துகுள்ளானது. இந்த லாரியானது புனேயிலிருந்து மதுரை காய்கறி மார்க்கெட்டிற்கு சுமார் 35 டன் எடை கொண்ட 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்லாரி வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு வந்தது.

அப்போது மெட்டூர் பாலத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் சிறு காயங்களுடன் ஓட்டுனர் உயிர் தப்பினார்.

60 அடி பள்ளித்தில் கவிழ்ந்த வெங்காய லாரி

இந்த விபத்தில் லாரியிலிருந்த வெங்காய மூட்டைகள் சிதைந்து 10 டன்னிற்கும் அதிகமான வெங்காயங்கள் கீழே கொட்டி வீணானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:முடங்கியது பட்டாசு தொழில்: வாழ்வை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details