தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துருக்கி நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி! - பல்லாரி வெங்காயம்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு வந்த துருக்கி நாட்டு பல்லாரி வெங்காயம் கிலோ ரூ. 70 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Onion imports from trukey
Onion imports from trukey

By

Published : Dec 22, 2019, 11:23 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட்டுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் அதேபோல் உள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் பச்சை காய்கறி கொண்டுவரப்பட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வைத்து விலை நிர்ணயிக்கப்பட்டு, பின்பு பல்வேறு மாவட்டங்களுக்கு குறிப்பாக கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல்லாரி வெங்காயம் விவசாயம் குறைந்து, வரத்து இல்லாத காரணத்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. இந்த பல்லாரி வெங்காயத்தினால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகவும் வேதனை அடைந்து பல்வேறு போரட்டங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு என 6 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் துருக்கி நாட்டில் இருந்து வாங்கி கப்பல் போக்குவரத்து மூலமாகக் கொண்டுவரப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வியாபாரிகள் வாங்கி இன்று ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு சுமார் 40 டன் கொண்டுவரப்பட்டு தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை

தற்போது ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையை பொருத்தவரை ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: ‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’ - சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details