திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செட்டியபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி(48). இவருடைய மனைவி பள்ளபட்டி சிப்காட் வளாகத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது போக்குவரத்து வசதி இல்லாததால் பணி முடித்த மனைவியை அழைத்து வர அவர் தனது இருசக்கர வானத்தில் மதுபோதையில் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிப்காட் வளாகத்திற்குள் செல்வதற்காக நெடுஞ்சாலையில் இருந்து திரும்பியபோது பாண்டியன் கட்டுப்பாட்டை மீறி இருசக்கர வாகனம் தடுமாறியுள்ளது.
போதையில் வந்தவர் மீது லாரி மோதி உயிரிழப்பு - சிப்காட் தொழிற்பேட்டை
திண்டுக்கல்: மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர், லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

One person died in truck collision in Dindigul
அப்போது வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பாண்டியன் உயிரிழந்தார். உடனே லாரி ஓட்டுநர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் பாண்டியன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.