திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்குப் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராலமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவது வழக்கம், இந்நிலையில் இங்கு சுற்றுலா வரும் இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா, போதைக் காளான் ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர்.
தற்போது புதிதாக எல்.எஸ்.டி. என்ற போதை ஸ்டாம்புகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ராஜசேகர், துணைக் காவல் ஆய்வாளர் காதர்மைதீன் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு கலையரங்கம் பகுதியில் சோதனை நடத்தினர்.