தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!

சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானர். மேலும், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

accident
சரக்கு லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து

By

Published : Apr 29, 2023, 2:13 PM IST

திண்டுக்கல்: கோவையிலிருந்து தேனி நோக்கி இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை சௌந்தர்ராஜ பெருமாள் இயக்கிய நிலையில், நடத்துநர் வேல்முருகன் உட்பட மொத்தம் 45 பேர் பயணம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி, தெத்துப்பட்டி அருகே சென்ற போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிந்தது.

இந்த விபத்தில் கோவையை சேர்ந்த பெயிண்டர் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கோவையில் இருந்து கேரளா சென்ற மகாலட்சுமி (23), ஸ்வேதா (24), ரேவதி (23), மகேஸ்வரி (23), உத்தமபாளையம் கார்த்திகேயன் (20), கோவை கணவாய் சேர்ந்த முருகேஸ்வரி (32), விசாலினி (14) கயல்விழி (12), மற்றும் டிரைவர் சௌந்தர்ராஜ பெருமாள் (38), பேருந்து நடத்துநர் வேல்முருகன் (35) உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Magna Elephant: கோவையில் வனத்துறை ஜீப்பை தாக்கிய மக்னா யானை.. 6 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!

ABOUT THE AUTHOR

...view details