திண்டுக்கல்: நத்தம் அருகே குட்டுப்பட்டி-மலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக் கண்ணு(40). இவர் ஒரு விவசாயி, இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் பலாப்பழத்தை பறிப்பதில் ஏற்பட்ட பிரச்னை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நத்தம் அருகே பலாப்பழம் பறிக்கும் தகராறில் விவசாயி கொலை - dispute near Natham
பலாப்பழத்தை பறிப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
நத்தம் அருகே பலாப்பழம் பறிக்கும் தகராறில் ஒருவர் கொலை
இந்நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் நேற்று (ஏப்ரல் 29) மறுபடியும் தகராறில் ஈடுபட்டார். அப்போது மறைத்து வைத்திருந்த கட்டையால் வெள்ளைக் கண்ணுவை அடித்து கொன்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த நத்தம் காவல்துறையினர், தங்கராஜை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவை வீழ்த்தி நம்பிக்கையூட்டும் முதிய தம்பதி