தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

CCTV:திண்டுக்கல் அருகே பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - Dindigul Govt Hospital

திண்டுக்கல் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 28, 2022, 10:49 PM IST

திண்டுக்கல் : வாழைக்காய்பட்டியைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர் அழகர்சாமி (42) என்பவர் தனது நண்பர் சித்திக் என்வருடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் எதிர்திசையில் வந்த கவராயபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (22) என்பவர் அவ்விருவர் வந்த வாகனத்தின் மீது அசுரவேகத்தில் திடீரென வந்து மோதினார்.

இதையடுத்து படுகாயமடைந்த அம்மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அழகர்சாமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திண்டுக்கல் அருகே பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சித்திக் மற்றும் ராஜ்குமார் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து சாணார்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மாநகராட்சி தற்காலிக ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவரின் கடைக்கு சீல்

ABOUT THE AUTHOR

...view details