திண்டுக்கல் மாவட்டம்வத்தலக்குண்டு அருகே ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் முருகாயம்மாள்(75). இவர் நேற்று (செப் 8) தனது வீட்டின் வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் முருகாயம்மாளின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மூதாட்டியிடம் செயினை பறித்த காட்சிகள் சிசிடிவி மூலம் வெளியாகி உள்ளது. அதில் மூதாட்டி வாசலை துடைப்பத்தால் பெருக்கிக் கொண்டிருக்கும் போது நோட்டமிடும் கொள்ளையர்கள் வீதியில் யாரும் இல்லாததை அறிந்து திடீரென மூதாட்டியின் அருகே வந்து செயினை பறித்துள்ளனர்.