திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சிநகர் பகுதியில் யோகாராஜ் (52) என்பவர் வசித்து வருகிறார். இவர் பணிக்குச் செல்லும் கல்லறை மேடு பகுதியில் இருந்து குறிஞ்சி நகர் வழியில் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் பாலம் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆற்றை கடந்து நடந்த செல்ல தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் நேற்று (ஆகஸ்டு 22) மாலை முதல் கனமழை பெய்து வந்தது. அப்போது கூலி வேலைபார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பிய அவர் ஆற்றை கடக்க முயற்சித்துள்ளார். திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யோகாராஜ் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் - உடலை மீட்ட தீயணைப்பு துறை
திண்டுக்கல்: வீட்டிற்கு செல்ல ஆற்றங்கரையை கடக்க முயன்ற முதியவர் நேற்று (ஆகஸ்டு 22) இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு இன்று (ஆகஸ்டு 23) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இதனிடையே யோகாராஜ் மொபைல் அழைப்பை எடுக்காததால் அவரது உறவினர்கள் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் இணைந்து யோகாராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஆற்றின் ஓரத்தில் குப்பையோடு குப்பையாக இறந்த நிலையில் யோகராஜை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் யோகாராஜ் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.