தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்கு அலுவலர்கள் ஒத்துழைக்கவில்லை - திண்டுக்கல் எம்.பி - வளர்ச்சிப் பணி

திண்டுக்கல்: நத்தம் பகுதியில் அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்ய வரும்போது அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

inspect development program
inspect development program

By

Published : Oct 23, 2020, 12:44 AM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நத்தம் பேரூராட்சிக்குள்பட்ட கொண்டையம்பட்டி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகமும், செந்துறை - குரும்பபட்டி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடையும், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கலையரங்க கட்டிடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ஆண்டி அம்பலம் தலைமையில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்து திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி, "சட்டப்பேரவை தொகுதி அளவில் ரூபாய் 11 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. இதனை ஆய்வு செய்வதற்காக‌ நானும், நத்தம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆண்டி அம்பலம் இருவரும் வந்திருந்தோம். அப்போது எங்களுடன் ஒன்றிய அலுவலர்கள் யாரும் உடன் வரவில்லை.

இதனால் நாங்களே சம்பந்தப்பட்டஅலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்தோம். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விடுமுறையில் சென்று விட்டதாக கூறினார்கள்.இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரி இடமும் புகார் செய்துள்ளோம்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details