தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்

திண்டுக்கல்: உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

dindigul
dindigul

By

Published : Dec 18, 2019, 2:29 PM IST

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார்.

தேர்தல் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்தை சோதனையிட்டனர். ஆனால், ஆலை உரிமையாளர் தனது மகளின் பிறந்தநாளையொட்டி விருந்து நடைபெறுவதாகவும் தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனவும் கூறியுள்ளார்.

எனினும் தேர்தல் காலங்களில் இதுபோன்ற விருந்து நடக்கக்கூடாது என அறிவுறுத்தி அலுவலர்கள் உடனடியாக விருந்தை நிறுத்த உத்தரவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வளர்ச்சி குறைவுக்கு மத்தியில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு!

ABOUT THE AUTHOR

...view details