தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொழில் நடத்தி வந்த தனியார் மண்டபத்திற்கு சீல் - பாலியல் தொழில் நடத்தி வந்த தனியார் மண்டபத்திற்கு சீல்

பழனியில் தொடர் பாலியல் தொழில் நடத்தி வந்த தனியார் மண்டபத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

பாலியல் தொழில் நடத்தி வந்த தனியார் மண்டபத்திற்கு சீல்
பாலியல் தொழில் நடத்தி வந்த தனியார் மண்டபத்திற்கு சீல்

By

Published : Aug 14, 2021, 4:17 PM IST

திண்டுக்கல்மாவட்டத்தில் விழாக்காலங்களில் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாடகைக்கு எடுத்து தங்கிக்கொள்ள வசதியாக ஏராளமான திருமண மண்டபங்கள், சத்திரங்கள் உள்ளன.

இந்த இடங்களில் வெளியூர் பக்தர்கள் போல சிலர் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மண்டபங்கள், சத்திரங்களில் சோதனை நடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சிலரை கைது செய்தனர்.

மண்டபத்திற்கு சீல்

மேலும், மண்டப நிர்வாகிகளையும் எச்சரித்தனர். இந்நிலையில், தற்போது அந்த மண்டபத்தில் தொடர்ந்து பாலியல் தொழில் நடந்து வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று (ஆக. 14) மண்டபத்திற்கு விரைந்த காவல் துறையினர், அதிரடியாக சோதனையிட்டனர்.

அப்போது, அங்கு பாலியல் தொழில் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மண்டபத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோர் சீல் வைத்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details