தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம்: அலுவலர் பணியிடை நீக்கம்! - ration card bribe

திண்டுக்கல்: குஜிலியம்பாறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை வழங்க லஞ்சம் பெற்ற அலுவலரை, பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

officer suspend
பணியிடை நீக்கம்

By

Published : May 19, 2021, 9:41 AM IST

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றும் சரவணன் என்பவர், பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு தலா 500/-ரூபாய் லஞ்சம் வாங்கும் காணொலி சமூக வலைதளத்தில் பரவி வைரலானது.

இதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

புதிய குடும்ப அட்டைக்கு லஞ்சம் பெற்ற அலுவலர் பணியிடை நீக்கம்

விசாரணையில், பொதுமக்களிடம் சரவணன் லஞ்சம் வாங்கியது உறுதியானதால், அவரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details