திண்டுக்கல்:பழனி பெரியம்மாபட்டியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பழனி உதவி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, “பெரியம்மாபட்டியில் அரசின் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி ஏழை மக்களுக்கு வழங்கிய நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் போலி பட்டா மூலம் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநில அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு நிலங்களை மீட்டு தர வேண்டும்” என கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே தகவலறிந்து அங்கு சென்ற ஆர்.டி.ஓ. சிவக்குமார், காவல் துறையினர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:கோவை விமான நிலைய விரிவாக்க ஆலோசனைக் கூட்டம்