தமிழ்நாடு முழுவதும் பொது சுகாதாரத் துறையில் சுமார் 1,510 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 ஆயிரத்து 670 துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சமூக நல செவிலியர் எனப் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்களை வீடு வீடாகச் சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் தங்களது 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, பேசிய செவிலி பத்மாவதி, 'உயிர் காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் எங்களுக்கு முறையான பணிப் பாதுகாப்பு இல்லை. பெண் ஊழியர்கள் என்பதால் கூடுதல் பணி திணிப்பு, பாலின பாரபட்சம் ஆகியவற்றை கைவிட வேண்டும். அதேபோல் பாலியல் புகார் குறித்த விசாரணைக் குழுவை செயல்படுத்த வேண்டும் போன்ற 16 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
செவிலியர் ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு மேலும், ஊதிய முரண்பாடு போன்ற கோரிக்கையை வலியுறுத்தி, எங்களது மனுவை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் வழங்கினோம். அவர் இது பற்றி தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக கூறியுள்ளார். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக தலைமையகத்தில் களைகட்டிய ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்!