தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓப்பனிங் முஸ்தப்பா... பீர பிரிச்சதும் பிரச்சனப்பா! - வேடசந்தூர் ஐந்து வட மாநில இளைஞர்கள் கைகலப்பு

ஒரு கல் ஒரு கண்ணாடி பட பாணியில் சரக்கு பாட்டிலை முகர்ந்து பார்த்துவிட்டு போதை ஏறுவதுபோல், வேடசந்தூர் பகுதியில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஓப்பனிங்கில் முஸ்தப்பா முஸ்தப்பா என்று தொடங்கி கடைசியில தகராறில் முடிந்திருக்கிறது வடமாநிலத்தைச் சேர்ந்த ஐவரின் ஒரு பாட்டில் பீர் பங்கீடு விவகாரம்.

North Indians fought at Vedasanthur  sharing beer make quarrel vedasanthur migrants  5 north migrants make nusiance at vedasanthur  வேடசந்தூர் ஐந்து வட மாநில இளைஞர்கள் கைகலப்பு  ஒரு பீர் பாட்டிலை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனை
ஓபனிங் முன்னாடி முஸ்தப்பா

By

Published : Dec 30, 2021, 5:23 PM IST

Updated : Dec 30, 2021, 5:46 PM IST

திண்டுக்கல்:வேடசந்தூர் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கிவருகின்றன. இந்த நூற்பாலைகளில் அதிகப்படியாக வடமாநில இளைஞர்கள் வேலை பார்த்துவருகின்றனர்.

வட மாநிலத்தைவிட தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், சம்பளம் அதிகமாக கிடைப்பதாகவும், இதனால் அதிகப்படியாக வேடசந்தூர் பகுதியில் உள்ள நூற்பாலைகளில் வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் வேலைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆத்துமேட்டில் அடிக்கடி ரகளை

இதில் சில வடமாநில இளைஞர்கள் விடுமுறை நாள்களில் வேடசந்தூர் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மது வாங்கிக் கொண்டு அங்கேயே குடித்துவிட்டு பின்பு வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் அவ்வப்போது ரகளையில் ஈடுபட்டுவருவதாகத் தொடர் புகார் தெரிவிக்கப்பட்டுவருகிறது.

அதேபோல் இன்று வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் வேடசந்தூர் அருகில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில இளைஞர்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் வேடசந்தூர் பகுதியில் இருந்த ஒரு அரசு மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவதற்குச் சென்றுள்ளனர்.

அங்கு ஒரு பீரை வாங்கிக்கொண்டு சைடிஸுக்கு அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் நெல்லிக்காய் ஊறுகாய் வாங்கியுள்ளனர், பின்னர் அந்த ஐவரும் ஒரு பீரை பங்கிட்டுக் கொள்ளலாம் என்று முடிவுசெய்துள்ளனர்.

ஐவரின் ஒரு பாட்டில் பங்கீடு

இதில் ஒருவர் அதிகமாகக் குடித்துவிட மற்ற நான்கு பேருக்கும் பீரின் அளவு கம்மியாக இருந்தால் கோபமடைந்த நான்கு பேர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு மீதமிருந்த பீரை நான்கு பேரும் பங்கிட்டுக் கொண்டனர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சரக்கு பாட்டிலை முகர்ந்து பார்த்துவிட்டு போதை ஏறியதுபோல் காட்சி இடம்பெற்றிருக்கும், அதேபோல் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிலையத்தில் ஒரு பீர் பாட்டிலை ஐந்து பேர் பங்கிட்டுக் கொண்டு அதில் பீரை கம்மியாகக் கொடுத்ததாக, இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேர் அந்த ஒருவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பீர் பாட்டிலை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனை

ஊருவிட்டு ஊருவந்து சரக்கு கிரக்கு அடிக்காதீங்க!

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தம் பெரும் பரபரப்பான சூழ்நிலைக்கு உள்ளானது. அதன் பின்பு கூட்டம் கூடியதால் அங்கிருந்த நான்கு வடமாநில இளைஞர்கள் தப்பிச் சென்றனர்.

வடமாநிலத்திலிருந்து பிழைப்பைத் தேடி தமிழ்நாடு வரும் வடமாநில இளைஞர்கள் மது போதைக்கு அடிமையாகி இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது அப்பகுதியினர் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தனது குடியை (குடும்பம்) நினைத்து குடிப்பது தனது சமூகத்திற்கும் தேசத்திற்கும் கேடு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசும் இதனை உணர்ந்து மதுவிலக்கைச் செயல்படுத்த முன்வர வேண்டும்.

குடி குடியைக் கெடுக்கும்! தொடர் குடிப்பழக்கம் உடல்நலனைக் கெடுக்கும்!

இதையும் படிங்க:Robbery: இருசக்கர வாகனத்திலிருந்து ரூ.4 லட்சம் பணம் கொள்ளை

Last Updated : Dec 30, 2021, 5:46 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details