தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி அடிவாரத்தில் செயல்படாத சிசிடிவி கேமராக்கள் - பர்ஸ் தொலைத்த ராணுவ வீரரின் பரிதாப வீடியோ.. - A mob that steals property

பழனியில் சாமி தரிசனம் செய்ய சென்ற இராணுவ வீரர் பர்ஸ் தொலைந்தது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனிடையே பழனி அடிவாரத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 24, 2022, 8:05 AM IST

திண்டுக்கல்: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோ. ராணுவத்தில் பணிபுரியும் இவர், நேற்று(செப்.23) மாலை பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனது தெரிய வந்ததுள்ளது. இது குறித்து, பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, அடிவாரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்கள் செயல்படுவதில்லை என்றும், அதனால், காணாமல் போன பர்ஸை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் தொலைத்த பர்ஸை எடுத்தவர்கள்‌ அதில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள ராணுவம் தொடர்பான ஆவணங்கள், அடையாள அட்டை ஆகியவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைத்து விடுமாறு கெஞ்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இந்நிலையில், பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களை குறிவைத்து அவர்களது உடைமைகளை திருடும் கும்பல் அதிகரித்துள்ளது.

இதனை கண்காணிக்க கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், கேமராக்கள் பொருத்தப்பட்ட சில நாட்களிலேயே கேமராக்கள் பராமரிப்பின்றி பழுதாகியுள்ளது.

வீடியோ வெளியிட்டு இராணுவ வீரர் வருத்தம்

இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படும் போது சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை கோவில் நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் சிசிடிவி கேமராக்களை இதுவரை சரி செய்யவில்லை.

கோவில் நிர்வாக அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தற்போது ராணுவ வீரர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். எந்த நோக்கத்திற்காக சிசிடிவி காமிராக்கள் பொறுத்தப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் உடனடியாக சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய திருக்கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: முக்கிய அறிவிப்பு - வரும் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு

ABOUT THE AUTHOR

...view details