தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், மாணவர் சேர்க்கைக்கான விளம்பரங்களை தனியார் பள்ளிகள் வெளியிட்டுவருகின்றன. பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளுக்குப் பள்ளியில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்றுவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஒரு சில தனியார் பள்ளிகளோ சிறந்த மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்வுகள் வைத்து மாணவர் சேர்க்கையை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
'மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது' - பள்ளிகளுக்கு எச்சரிக்கை - Private schools
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தற்போது நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்தவொரு எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத் தேர்வோ நடத்தக் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடந்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்