திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை கரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சீனிவாசன் பேசும்போது, "திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் அரசு தலைமை மருத்துவமனையில் தனி கட்டிடம் தயாராக உள்ளது. கரோனா வைரஸ் என்பது வெளிநாட்டில் இருந்து வந்தது. இதனைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.